அன்பே புது கவிதைகள்

This content is also available in: English

பாடகர்கள்: சங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர்: விஜய் ஆண்டனி
படம்: யாமிருக்க பயமேன்

இந்த பாடலை பற்றி :
யாமிருக்க பயமேன் படத்திலிருந்து அன்பே புது கவிதைகள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சங்கர் மகாதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.அன்பே புது கவிதைகள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

யாமிருக்க பயமேன் படத்தின் அன்பே புது கவிதைகள் பாடலின் வரிகள்

குழந்தைகள் : …………………….
ஆண் : அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே…..
அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே
அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே…..
அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே
ஆண் : கஷ்டங்களை தாங்கு வெற்றி உண்டு
மேடும் பள்ளம் தானே வாழ்க்கை இங்கு
கனவுகள் காணு தூக்கம் கொன்று
நடந்திடும் என்று நம்பி இன்று……
குழந்தைகள் : முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ அஃதொப்ப தில்
குழந்தைகள் : வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்மெய்
வருத்தக் கூலி தரும்
ஆண் : விதைக்குள் தூங்கும் ஆலமரம்
கண்ணுக்குத் தெரியாது
அது மரமாய் மாறும் காலம் வரும்
அது மண்ணுக்குள் உறங்காது
ஆண் : நீ தேடும் சிகரம் தூரம் இல்லை
நடப்பதை நிறுத்தாதே
சிறு துளிதான் இங்கே கடலாகும்
நம்பிக்கை தொலைக்காதே
ஆண் : மீண்டும் மீண்டும் பாதம் பட்டால்
பாறை கூட பாதை ஆகும்
முன்னால் வைத்த காலை நீயும்
பின்னால் எடுக்காதே…..
ஆண் : பூக்கள் பூக்க வேர்கள் தேவை
வெற்றிக்கிங்கே வேண்டும் வேர்வை
உன் கை ரேகை தேய்ந்தாலும்
உழைப்பதை நிறுத்தாதே
ஆண் : அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே…..
அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே….
அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே…..
அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே….
ஆண் : உன்னால் என்ன முடியும் என்று
உனக்கே தெரியாது
உன் சக்தியை நீயும் புரிந்து கொண்டால்
சாதிக்க தடை ஏது
ஆண் : முயற்சிகள் செய்து தோற்பதெல்லாம்
தோல்விகள் கிடையாது
விழுந்து விடாமல் யாரும் இங்கே
எழுந்தது கிடையாது
ஆண் : இல்லை என்ற சொல்லை கூட
இல்லை என்று தூக்கிப் போடு
நாளை உன்னை மேலே ஏற்றும்
துணிச்சலை இழக்காதே
ஆண் : வீழ்ந்தால் கூட பந்தாய் மாறு
வேகம் கொண்டு மேலே ஏறு
முந்திக் கொண்டு முன்னால் ஓடு
முயற்சியை நிறுத்தாதே……..
ஆண் : அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே…..
அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே….
அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே…..
அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே….
ஆண் : கஷ்டங்களை தாங்கு வெற்றி உண்டு
மேடும் பள்ளம் தானே வாழ்க்கை இங்கு
கனவுகள் காணு தூக்கம் கொன்று
நடந்திடும் என்று நம்பி இன்று……

யாமிருக்க பயமேன் படத்தின் மற்ற பாடல்கள்

அன்பே புது கவிதைகள் தேடல் சொற்கள்:
அன்பே புது கவிதைகள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அன்பே புது கவிதைகள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அன்பே புது கவிதைகள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அன்பே புது கவிதைகள் பாட்டு
அன்பே புது கவிதைகள் ஐடியூன்ஸ், அன்பே புது கவிதைகள் tamil2lyrics
யாமிருக்க பயமேன் அன்பே புது கவிதைகள்
அன்பே புது கவிதைகள் பாட்டு வரிகள்
அன்பே புது கவிதைகள் படத்தின் பேர்
அன்பே புது கவிதைகள் ரிங்டோன்
அன்பே புது கவிதைகள் வரிகள்
பாடல் அன்பே புது கவிதைகள்
விஜய் ஆண்டனி அன்பே புது கவிதைகள்