இவன் துப்பறிவாளன்

This content is also available in: English

பாடகர்கள்: மிஸ்க்கின் ஹேமாம்பிகா
இசையமைப்பாளர்: அரோல் கோரெல்லி
படம்: துப்பறிவாளன்

இந்த பாடலை பற்றி :
துப்பறிவாளன் படத்திலிருந்து இவன் துப்பறிவாளன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மிஸ்க்கின் ஹேமாம்பிகா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அரோல் கோரெல்லி.இவன் துப்பறிவாளன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

துப்பறிவாளன் படத்தின் இவன் துப்பறிவாளன் பாடலின் வரிகள்

பாடகர் : மிஸ்க்கின் ஹேமாம்பிகா

இசை அமைப்பாளர் : அரோல் கோரெல்லி

பெண் : ஓடாதே ஓடாதே
ஆண் : ஓடாதே ஓடாதே

ஆண் : கொலைகள் செய்து
ஊளை யிட்டு
ஓடாதே ஓடாதே

பெண் : ஓடாதே ஓடாதே

ஆண் மற்றும் பெண் : நீ தப்பித்து
புதுப்பித்து சட்டை மாற்றி
வாழ்ந்தால் கூட
வருவான் இவன் வருவான்
பிடிப்பான் உன்னை பிடிப்பான்

ஆண் : இவன் ஆறடி உயரம்
பெண் : ஆறடி உயரம்
ஆண் : தேகம் கருப்பு
பெண் : தேகம் கருப்பு
ஆண் : இதயம் வெள்ளை
பெண் : இதயம் வெள்ளை

ஆண் : இவன் துப்பறிவாளன்
பெண் : ஆஹா…ஆஆ
ஆண் : பெயர் கணியன் பூங்குன்றன்
பெண் : ஆஆ …
ஆண் : ஊர் யாதும் ஊரே
யாவரும் கேளீர்
பெண் : ஆஆ …

ஆண் : இவன் துப்பறிவாளன்
பெண் : ஆஹா…ஆஆ
ஆண் : பெயர் கணியன் பூங்குன்றன்
பெண் : ஆஆ …
ஆண் மற்றும் பெண் : ஊர் யாதும் ஊரே
யாவரும் கேளீர்

ஆண் : குற்றம் நடக்கும்
பெண் : குற்றம் நடக்கும்
ஆண் : பெரும் குற்றம் நடக்கும்
பெண் : குற்றம் நடக்கும்

ஆண் : வஞ்சம் சேர்த்து
பாவம் சேர்த்து
பொய்மை வாழ
உண்மை சாக
மனிதன் சருகாய்
எரிந்து போக
பெண் : குற்றம் நடக்கும்

ஆண் : குற்றம் நடக்கும்
பெண் : குற்றம் நடக்கும்
ஆண் : பெரும் குற்றம் நடக்கும்
பெண் : குற்றம் நடக்கும்

ஆண் : ஆசை கோவம்
காமம் பதவி
நான்கும் புழுவாய்
மூளை குடைய

ஆண் : அன்பு பண்பு
நேர்மை வீரம்
உதிர்ந்து மனிதன்
சல்லி பயலாய்

ஆண் : வினை செய்ய
பெண் : ஆஹா ஆஆ …
ஆண் : கொலை செய்ய
பெண் : ஆஹா ஆஆ …

ஆண் : பகை செய்ய
பெண் : ஆஹா ஆஆ …
ஆண் : பழி செய்ய
பெண் : ஆஹா ஆஆ …

ஆண் மற்றும் பெண் : வருவான்
இவன் வருவான்
பிடிப்பான் உன்னை பிடிப்பான்
உன் தாடை உடைய அடிப்பான்

ஆண் : {இவன் துப்பறிவாளன்
பெண் : இவன் துப்பறிவாளன்
ஆஹா…ஆஆ
ஆண் : பெயர் கணியன் பூங்குன்றன்
பெண் : பெயர் கணியன் பூங்குன்றன்
ஆஆ …
ஆண் : ஊர் யாதும் ஊரே
யாவரும் கேளீர்
பெண் : ஊர் யாதும் ஊரே
யாவரும் கேளீர்
ஆஹா ஆஆ ….} (2)

ஆண் : அறிவும் திறனும்
உலகில் உயர
அதர்ம வேகம் ஒளியாய் மாற
காவல் சேவை செய்யும் வீரர்
அயர்ந்து உடைந்து சோர்ந்து போக

ஆண் : பாம்புகள் நின்று படம் எடுக்க
பெண் : படம் எடுக்க
ஆண் : பேய்கள் சிரித்து பேன் எடுக்க
பெண் : பேன் எடுக்க

ஆண் : வாதும் சூதும் புயலாய் அடிக்க
பெண் : புயலாய் அடிக்க
ஆண் மற்றும் பெண் : வாழ்க்கை இங்கே
இருளில் மூழ்க

ஆண் : வெளிச்சம் வருமா
பெண் : வெளிச்சம் வருமா
ஆண் : பயம் விலகுமா
பெண் : பயம் விலகுமா

ஆண் மற்றும் பெண் : பகைவர் பாவம்
செய்ய செய்ய
நம் கால்கள் ஓடி உடைய

ஆண் : எங்கே போவது
பெண் : எங்கே போவது
ஆண் : எப்படி வாழ்வது
பெண் : எப்படி வாழ்வது
ஆண் : தலை குனிந்து
வலு விழந்து
கண்ணீர் உப்பு கரைந்து போக

ஆண் : ஒரு சத்தம் கேட்கிறது
பெண் : ஒரு சத்தம் கேட்கிறது
ஆண் : இடி சத்தம் கேட்கிறது
பெண் : இடி சத்தம் கேட்கிறது

ஆண் மற்றும் பெண் : நிமிர்த்து பார்த்தால்
நெட்டை மனிதன்
பறக்கும் தோள்கள்
பாயும் கால்கள்
யார் இவன் காதலன்
யார் இவன் பாரதி

ஆண் : {இவன் துப்பறிவாளன்
பெண் : இவன் துப்பறிவாளன்
ஆஹா…ஆஆ
ஆண் : பெயர் கணியன் பூங்குன்றன்
பெண் : பெயர் கணியன் பூங்குன்றன்
ஆஆ …
ஆண் : ஊர் யாதும் ஊரே
யாவரும் கேளீர்
பெண் : ஊர் யாதும் ஊரே
யாவரும் கேளீர்
ஆஹா ஆஆ ….} (2)

துப்பறிவாளன் படத்தின் மற்ற பாடல்கள்

இவன் துப்பறிவாளன் தேடல் சொற்கள்:
இவன் துப்பறிவாளன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இவன் துப்பறிவாளன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இவன் துப்பறிவாளன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இவன் துப்பறிவாளன் பாட்டு
இவன் துப்பறிவாளன் ஐடியூன்ஸ், இவன் துப்பறிவாளன் tamil2lyrics
துப்பறிவாளன் இவன் துப்பறிவாளன்
இவன் துப்பறிவாளன் பாட்டு வரிகள்
இவன் துப்பறிவாளன் படத்தின் பேர்
இவன் துப்பறிவாளன் ரிங்டோன்
இவன் துப்பறிவாளன் வரிகள்
பாடல் இவன் துப்பறிவாளன்
அரோல் கோரெல்லி இவன் துப்பறிவாளன்