தூக்கி எரிஞ்சிட்டு

This content is also available in: English

பாடகர்கள்: டயனா தாரா,ஜதீஸ்
இசையமைப்பாளர்: ஜதீஸ்
படம்: ஜாங்கிரி

இந்த பாடலை பற்றி :
ஜாங்கிரி படத்திலிருந்து தூக்கி எரிஞ்சிட்டு என்ற பாடலை பாடிய பாடகர்கள் டயனா தாரா,ஜதீஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜதீஸ்.தூக்கி எரிஞ்சிட்டு பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜாங்கிரி படத்தின் தூக்கி எரிஞ்சிட்டு பாடலின் வரிகள்

பாடகிகள் : டயனா தாரா, பிரியா

பாடகர் : ஜதீஸ்

இசையமைப்பாளர் : ஜதீஸ்

ஆண் : தூக்கி எறிஞ்சிட்டு
போறா போறா காதலை
உசுர எடுக்கிறா போதும்
இந்த வேதனை

ஆண் : துண்டா நானும்
உடையுறேன் நீயும் சொன்ன
வார்த்தையால் பெண்ணே
உன்ன நெனச்சு தான்
வாழ்கைய எங்கோ
தொலைக்குறேன்

ஆண் : ஹே காதல் எல்லாம்
மாயமா துளி கண்ணீர் மட்டும்
மிஞ்சுமா விதி என்று சொல்லி
மறக்கவா அந்த காதலை
மொத்தமா வெறுக்கவா

ஆண் : உன்னை துன்பத்தில்
தள்ளி ரசித்தவன் இங்கே
இன்பமாய் துள்ளி குதிக்கிறான்
அடி அன்பாக நீயும் நன்றாக
வாழ எல்லாமே செய்தேனே

ஆண் : பெண்ணே மோதல்
இல்லா காதல் தான் இந்த
உலகில் எங்கும் இல்லையே
மனம் ஒண்ணா ரெண்டும்
சேர்ந்திட்டா அது போலே
காதல் இல்லையே

ஆண் : அடி சொந்தங்கள்
உன்னை மறக்கலாம் உன்
சோகங்கள் கண்டு சிரிக்கலாம்
ஆனால் உன்னை நான் என்றும்
என் நெஞ்சில் வைப்பேன் என்
அன்பு மாறாதே

ஆண் : உனக்காக நானும்
இருக்கிறேன் மறுக்காதே
என்னை நம்பிடு மனசெல்லாம்
நீயே நிற்கிறாய் உன் இதயம்
கொஞ்சம் தந்திடு

ஆண் : தூக்கி எறிஞ்சிட்டு
போறா போறா காதலை
தனியா நடக்குறேன் கால்கள்
போகும் பாதையில்

ஆண் : எதிர் பார்த்த கண்ணில்
தான் சில நீர் துளி பூக்கிறதே
வலியோடு அன்பே நான்
வீதியில் அலைகிறேன்

ஆண் : விடை இல்லா கேள்வி
போல் என் காதலும் இருக்கிறதே
ஒரு வார்த்தை சொன்னாலும்
என் வாழ்கையும் பிழைதிடுமே

ஆண் : நில்லு சொல்லாமல்
போகாதே என் கண்ணீரும்
தீராதே உன்னை நான்
பார்க்காமல் மனம்
முள்ளாக மாறிடுதே

ஆண் : உன்னை துன்பத்தில்
தள்ளி ரசித்தவன் இங்கே
இன்பமாய் துள்ளி குதிக்கிறான்
அடி அன்பாக நீயும் நன்றாக
வாழ எல்லாமே செய்தேனே

ஆண் : அடி சொந்தங்கள்
உன்னை மறக்கலாம் உன்
சோகங்கள் கண்டு சிரிக்கலாம்
ஆனால் உன்னை நான் என்றும்
என் நெஞ்சில் வைப்பேன் என்
அன்பு மாறாதே

பெண் : ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆஹா
ஆஆ ஆஆ ஆஆ

பெண் : வேண்டாம் காதலே
போதும் போதும் போய் விடு
மீண்டும் ஒரு முறை
வேண்டாம் அந்த வேதனை

பெண் : ஒரு காதல் காயம்
ஆறும் முன் மறு காதல்
என்னை கேக்குதே எனக்காக
எதையும் செய்யவே அவன்
நெஞ்சம் எல்லாம் துடிக்குதே

பெண் : நான் ஆசை எல்லாம்
வெறுக்கிறேன் மண வாழ்கை
சிறையில் தவிக்கிறேன் உனக்காக
என்னை மாற்றவே என் மனசில்
இடமும் இல்லையே

ஆண் : உன்னை துன்பத்தில்
தள்ளி ரசித்தவன் இங்கே
இன்பமாய் துள்ளி குதிக்கிறான்
அடி அன்பாக நீயும் நன்றாக
வாழ எல்லாமே செய்தேனே

ஆண் : பெண்ணே மோதல்
இல்லா காதல் தான் இந்த
உலகில் எங்கும் இல்லையே
மனம் ஒண்ணா ரெண்டும்
சேர்ந்திட்டா அது போலே
காதல் இல்லையே

ஆண் : உனக்காக நானும்
இருக்கிறேன் மறுக்காதே
என்னை நம்பிடு மனசெல்லாம்
நீயே நிற்கிறாய் உன் இதயம்
கொஞ்சம் தந்திடு

ஜாங்கிரி படத்தின் மற்ற பாடல்கள்

தூக்கி எரிஞ்சிட்டு தேடல் சொற்கள்:
தூக்கி எரிஞ்சிட்டு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தூக்கி எரிஞ்சிட்டு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தூக்கி எரிஞ்சிட்டு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தூக்கி எரிஞ்சிட்டு பாட்டு
தூக்கி எரிஞ்சிட்டு ஐடியூன்ஸ், தூக்கி எரிஞ்சிட்டு tamil2lyrics
ஜாங்கிரி தூக்கி எரிஞ்சிட்டு
தூக்கி எரிஞ்சிட்டு பாட்டு வரிகள்
தூக்கி எரிஞ்சிட்டு படத்தின் பேர்
தூக்கி எரிஞ்சிட்டு ரிங்டோன்
தூக்கி எரிஞ்சிட்டு வரிகள்
பாடல் தூக்கி எரிஞ்சிட்டு
ஜதீஸ் தூக்கி எரிஞ்சிட்டு