கல்லா மன்னா

This content is also available in: English

பாடகர்கள்: மிதுனா,சாய் ரிஷி
இசையமைப்பாளர்: ஷியாம் பெஞ்சமின்
படம்: கனவு வாரியம்

இந்த பாடலை பற்றி :
கனவு வாரியம் படத்திலிருந்து கல்லா மன்னா என்ற பாடலை பாடிய பாடகர்கள் மிதுனா,சாய் ரிஷி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஷியாம் பெஞ்சமின்.கல்லா மன்னா பாடல் வரிகள் கீழே உள்ளது.

கனவு வாரியம் படத்தின் கல்லா மன்னா பாடலின் வரிகள்

பாடகிகள் : மிதுனா, சாய் லட்சுமி

பாடகர் : சாய் ரிஷி

இசையமைப்பாளர் : ஷியாம் பெஞ்சமின்

பெண் : கல்லா மண்ணா
கல்லா மண்ணா ஆடலாம்
நாடு புடிக்க நாடு புடிக்க
ஓடலாம் டயர் வண்டி
ஓட்டியே வீடு போயி
சேரலாம்

குழு : கிச்சு கிச்சு தாம்பாளம்
கியா கியா தாம்பாளம்

ஆண் : பச்சை குதிரை
தாண்டும் போதும் குனிபவன்
தானே எங்க ஊரு மாம்பழம்

குழு : கல்லா மண்ணா
கல்லா மண்ணா நாடு
புடிக்க நாடு புடிக்க

பெண் : விளையாட்டுக்கு
பஞ்சம் கிராமத்துல சுத்தமா
குழு : இல்லை

பெண் : விலை வாசி
கவலை எங்களுக்கு
என்னைக்குமே
குழு : இல்லை

ஆண் : மண்ணு தானே
குழு : சோறு
இலை தானே
குழு : கீரை

பெண் : கல்லு தானே
குழு : பொரியல்
அட எப்படி எங்க சமையல்

குழு : நாங்க மணலை
குமிச்சா வீடு தான் டவுசரை
புடிச்சா ரயிலு தான் புர்ருன்னு
ஓட்டுவோம் பைக் தான் சர்ர்ன்னு
அடிப்போம் பிரேக் தான்

குழு : ஹார்ன் அடிச்சு
வர மாட்டியா ஹே

பெண் : மையை கொண்டே
மீசை தீட்டலாம்
ஆண் : குச்சி கூட
துப்பாக்கியாய் ஆகலாம்

பெண் : கிடைப்பதில்
இன்பம் காணவே
ஆண் : அட எங்ககிட்ட
யோசனை கேட்கலாம்

குழு : அம்மா குத்து ஆனந்தம்
எங்க சொத்து சந்தோசம் எங்க
தேவை ரொம்ப சிறிசு தான்
ஆனா கற்பனையோ ரொம்ப
பெருசு தான்

குழு : அதிலி புத்திலி மகா
சுகா பால் பரங்கி ராட்மா
பூட்மா சீ சால்

பெண் : நாம் ஓசியான்
தினம் பாடியே அட நிலா
போச்சி வா ஆடலாம்

பெண் : தைத்தகாதை
யை அட நொண்டியே
வா உப்பு வைக்க நாமும்
போகலாம்

குழு : கிள்ளு
ஆண் : மூக்கு
கிளி கிள்ளலாம்
குழு : நீ தள்ளு
ஆண் : கள்ளன்
யாரு தேடலாம்
குழு : பாரு
வண்ணம் பொத்தி
ஓடலாம்
குழு : நீ ஏறு காக்கா
குஞ்சு ஆகலாம்

பெண் : பத்து விரல்
சேர்ந்தா பீப்பீ தான்
குழு : காலி லோட்டா
எங்களுக்கு காபி தான்

ஆண் : வேர்வை
வாசம் சொக்கு தான்
குழு : தினம் ஆடினா
இல்லை சீக்கு தான்

குழு : கிரா கிரா டொம்மா
டொம்மா அவ்வா அவ்வா
பியூ பியூ பியூ பியூ

குழு : பப்பு சாதம் கையில்
கடையலாம் நண்டு ஊற
கிச்சு கிச்சு மூட்டலாம்

குழு : கள்ள பிராந்து வருது
அடிக்கலாம் சிரிச்சு சிரிச்சு
மீண்டும் ஆடலாம்

குழு : கிச்சு கிச்சு தாம்பாளம்
கியா கியா தாம்பாளம்

ஆண் : பச்சை குதிரை
தாண்டும் போதும்
குனிபவன் தானே
எங்க ஊரு மாம்பழம்

குழு : கிச்சு கிச்சு தாம்பாளம்
கியா கியா தாம்பாளம்

குழு : பச்சை குதிரை
தாண்டும் போதும்
குனிபவன் தானே
எங்க ஊரு மாம்பழம்

கனவு வாரியம் படத்தின் மற்ற பாடல்கள்

கல்லா மன்னா தேடல் சொற்கள்:
கல்லா மன்னா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கல்லா மன்னா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கல்லா மன்னா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கல்லா மன்னா பாட்டு
கல்லா மன்னா ஐடியூன்ஸ், கல்லா மன்னா tamil2lyrics
கனவு வாரியம் கல்லா மன்னா
கல்லா மன்னா பாட்டு வரிகள்
கல்லா மன்னா படத்தின் பேர்
கல்லா மன்னா ரிங்டோன்
கல்லா மன்னா வரிகள்
பாடல் கல்லா மன்னா
ஷியாம் பெஞ்சமின் கல்லா மன்னா