உன் சிரிப்பினில்

This content is also available in: English

பாடகர்கள்: கௌதமி ராவ் மற்றும் ராபி
இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ்
படம்: பச்சைக்கிளி முத்துச்சரம்

இந்த பாடலை பற்றி :
பச்சைக்கிளி முத்துச்சரம் படத்திலிருந்து உன் சிரிப்பினில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கௌதமி ராவ் மற்றும் ராபி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.உன் சிரிப்பினில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் உன் சிரிப்பினில் பாடலின் வரிகள்

பாடகர்கள் : கௌதமி ராவ் மற்றும் ராபி

இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

பெண் : ஹ்ம்…ம்ம்…ஹ்ம்…ம்ம்ம்….
ஹ்ம்…ம்ம்…ஹ்ம்…ம்ம்ம்….

பெண் : உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
உன் இமைகளின் கண்ணிமைகளின்
மென்பார்வையில் மீதியும் தேய

பெண் : ம் இன்று நேற்று என்று இல்லை
ஏன் இந்த நிலை
ம் உன்னைக்கண்ட நாளினின்றே
நான் செய்யும் பிழை

பெண் : உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
உன் இமைகளின் கண்ணிமைகளின்
மென்பார்வையில் மீதியும் தேய

பெண் : உனக்குள் இருக்கும் மயக்கம்
அந்த உயரத்து நிலவை அழைக்கும்
இதழின் விளிம்பு துளிர்க்கும்
என் இரவினை பனியில் நனைக்கும்

பெண் : எதிரினில் நான் எரிகிற நான்
உதிர்ந்திடும் மழைச்சரம் நீயே
ஒருமுறை அல்ல முதல்முறை அல்ல
தினம்தினம் என்னை சூழும் தீ

ஆண் : உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
உன் இமைகளின் கண்ணிமைகளின்
மென்பார்வையில் மீதியும் தேய

ஆண் : முதல்நாள் பார்த்த வனப்பு
துளி குறையவும் இல்லை உனக்கு
உறக்கம் விழிப்பில் கனவாய்
உனைக்காண்பதே வழக்கம் எனக்கு

ஆண் : அருகினிலே வருகையிலே
துடிப்பதை நிறுத்துது நெஞ்சம்
முதல்முதல் இன்று நிகழ்கிறதென்று
நடிப்பதில் கொஞ்சம் வஞ்சமே

பெண் : உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
ஆண் : உன் இமைகளின் கண்ணிமைகளின்
மென்பார்வையில் மீதியும் தேய

பெண் : ம் இன்று நேற்று என்று இல்லை
ஏன் இந்த நிலை
ம் உன்னைக்கண்ட நாளினின்றே
நான் செய்யும் பிழை

ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஓ
ஓஹோ ஓஹோ
ஹோ ஓ ஓ ஓ ஓ
ஓஹோ ஓஹோ

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மற்ற பாடல்கள்

உன் சிரிப்பினில் தேடல் சொற்கள்:
உன் சிரிப்பினில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உன் சிரிப்பினில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உன் சிரிப்பினில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உன் சிரிப்பினில் பாட்டு
உன் சிரிப்பினில் ஐடியூன்ஸ், உன் சிரிப்பினில் tamil2lyrics
பச்சைக்கிளி முத்துச்சரம் உன் சிரிப்பினில்
உன் சிரிப்பினில் பாட்டு வரிகள்
உன் சிரிப்பினில் படத்தின் பேர்
உன் சிரிப்பினில் ரிங்டோன்
உன் சிரிப்பினில் வரிகள்
பாடல் உன் சிரிப்பினில்
ஹாரிஸ் ஜெயராஜ் உன் சிரிப்பினில்