நீ போயியா

This content is also available in: English

பாடகர்கள்: விஜய் யேசுதாஸ்
இசையமைப்பாளர்: எஸ். ஜே. சூர்யா
படம்: இசை

இந்த பாடலை பற்றி :
இசை படத்திலிருந்து நீ போயியா என்ற பாடலை பாடிய பாடகர்கள் விஜய் யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். ஜே. சூர்யா.நீ போயியா பாடல் வரிகள் கீழே உள்ளது.

இசை படத்தின் நீ போயியா பாடலின் வரிகள்

பாடகர் : விஜய் யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : எஸ். ஜே. சூர்யா

ஆண் : நான் காண்பது
இங்கு உண்மையா
ஏ உயிரே என் உயிரே
நீ சாகாதிரு

ஆண் : நான் வாழ்வதே
இங்கு உண்மையா
என் மனமே என் மனமே
நீ வீழாதிரு

ஆண் : எனை சுட்ட
நிலவு பொய்யா
எனை தொட்ட
தென்றல் பொய்யா
நீ இட்ட முத்தம் பொய்யா
பெண்ணே நீ மெய்யா
இல்லை பொய்யா

ஆண் : சிறு ஒரு இதயத்தை
மறுபடி மறுபடி
உலகமே மிதித்ததடி
வலியிலும் துயரிலும்
குழம்பிய இருதயம்
உனக்கென துடித்ததடி

ஆண் : வீழ்கையில்
நான் வீழ்கையில்
உன் காதல் தாங்குமடி
நீயுமே பொய்யாகினால்
என் உயிரே நீங்குமடி…
நீ பொய்யா………

ஆண் : யார் கேட்டது
இந்த காதலை
ஏ விழியே நீ அவளை
ஏன் காட்டினாய்

ஆண் : யார் கேட்டது
இந்த பொய்யினை….
என் மனமே ….. நீ என்னையே
ஏன் ஏமாற்றினாய்

ஆண் : அவள் ஊடல்
முழுவதும் பொய்யா
அவள் விழியின்
மொழிகள் பொய்யா
அவள் முத்தம்
மொத்தம் பொய்யா
எனக்காய் துடித்தாளே
அது பொய்யா

ஆண் : கனவுகள் விளைவதும்
கனவுகள் கலைவதும்
தினம் தினம் நிகழ்வதடி
ஒரு யுக நினைவினை
நொடியினில் உடைப்பது
கொடுமையின் கொடுமையடி

ஆண் : பிள்ளைப்போல்
சிறு பிள்ளைப்போல்
என் நெஞ்சம் கொண்டிருந்தேன்
முள்ளைப்போல்
ஒரு முள்ளைப்போல்
அதில் உன்னை சுமந்திருந்தேன்
கிழிகின்றேன்

ஆண் : காற்றின்றியே
இங்கு வாசமோ
ஏ மலரே ஏன் இதழால்
நீ பொய் பேசினாய்

ஆண் : வானின்றியே
இங்கு தூரலா
ஏ முகிலே ஏன் துளியாய்
நீ பொய் பேசினாய்

ஆண் : அவள் விழியின்
கண்மை உண்மை
அவள் இதழின்
மென்மை உண்மை
அவள் பெண்மை கூட உண்மை
மெய்யே பொய் என்றால்
எது உண்மை

ஆண் : அவளையும் இசையையும்
எனது இரு விழியென
உலகத்தை ரசித்திருந்தேன்
விழிகளில் பிழை இல்லை
உலகமே திடுமென
இருண்டிட குழம்பி நின்றேன்

ஆண் : ஐம்புலன் என் ஐம்புலன்
உன்னை ஐயம் கொள்ளுதடி
நெஞ்சமோ என் நெஞ்சமோ
அதை ஏற்றிட மறுக்குதடி

ஆண் : எது உண்மை….
எது உண்மை….

இசை படத்தின் மற்ற பாடல்கள்

நீ போயியா தேடல் சொற்கள்:
நீ போயியா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீ போயியா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீ போயியா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீ போயியா பாட்டு
நீ போயியா ஐடியூன்ஸ், நீ போயியா tamil2lyrics
இசை நீ போயியா
நீ போயியா பாட்டு வரிகள்
நீ போயியா படத்தின் பேர்
நீ போயியா ரிங்டோன்
நீ போயியா வரிகள்
பாடல் நீ போயியா
எஸ். ஜே. சூர்யா நீ போயியா