உனக்கென நான்

This content is also available in: English

பாடகர்கள்: சக்திஸ்ரீ கோபாலன்,விஜய் ஆன்டனி
இசையமைப்பாளர்: விஜய் ஆன்டனி
படம்: காதலில் விழுந்தேன்

இந்த பாடலை பற்றி :
காதலில் விழுந்தேன் படத்திலிருந்து உனக்கென நான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சக்திஸ்ரீ கோபாலன்,விஜய் ஆன்டனி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி.உனக்கென நான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

காதலில் விழுந்தேன் படத்தின் உனக்கென நான் பாடலின் வரிகள்

பாடகி : சக்திஸ்ரீ கோபாலன்

பாடகர் : விஜய் ஆன்டனி

இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி

பெண் : உனக்கென நான்
எனக்கென நீ நினைக்கையில்
இனிக்குதே உடலென நான்
உயிரென நீ இருப்பது
பிடிக்குதே

பெண் : உனதுயிராய் எனதுயிரும்
உலவிட துடிக்குதே தனியொரு
நான் தனியொரு நீ நினைக்கவும்
வலிக்குதே

பெண் : இதயத்தை எதற்காக
எதற்காக இடம் மாற்றினாய்
இனிக்கும் ஒரு துன்பத்தை
குடியேற்றினாய்

பெண் : புதுமைகள் தந்து
மகிழ்ச்சியில் என்னை
ஆழ்த்த பரிசுகள் தேடி
பிடிப்பாய்

பெண் : கசந்திடும் சேதி
வந்தால் பகிர்ந்திட பக்கம்
நீ இருப்பாய் நோயென
கொஞ்சம் படுத்தால் தாய்
என மாறி அணைப்பாய்
உனது காதலில் விழுந்தேன்

பெண் : அருகினில் வா
அருகினில் வா இடைவெளி
வலிக்குதே உனதுயிரில்
எனதுயிரை ஊற்றிட
துடிக்குதே

பெண் : நானென நீ நீ
என நான் இணைந்திட
பிடிக்குதே புது உலகம்
புது சருகம் படைத்திட
தவிக்குதே

பெண் : மழை வெயில்
காற்றோடு பூகம்பம்
வந்தாலுமே உனதுமடி
நான் தூங்கும் வீடாகுமே

பெண் : அருகினில் வந்து
மடியினில் சாய்ந்து படுத்தால்
மெல்லிய குரலில் இசைப்பாய்

பெண் : மார்பினில் முகத்தை
புதைத்தால் கூந்தலை கோதி
கொடுப்பாய் அணைப்பினில்
மயங்கி கிடந்தால் அசைந்திட
கூட மறுப்பாய் உனது காதலில்
விழுந்தேன்

பெண் : மரணமே பயந்திடும்
தூரத்தில் நாமும் வாழ்கின்றோம்

பெண் : மனித நிலை தாண்டி
போகிறோம் இனி நமக்கென்றும்
பிரிவில்லையே ஓஹோ ஹோ
பிரிவில்லையே

ஆண் : எனக்கென எதுவும்
செய்தாய் உனக்கென என்ன
நான் செய்வேன் பொங்கிடும்
நெஞ்சின் உணர்வை சொல்லவும்
வார்த்தை போதாதே

ஆண் : விழிகளின் ஓரம்
துளிர்க்கும் ஒரு துளி நீரே
சொல்லட்டும் உனது
காதலில் விழுந்தேன்

பெண் : உனக்கென நான்
எனக்கென நீ நினைக்கையில்
இனிக்குதே உடலென நான்
உயிரென நீ இருப்பது
பிடிக்குதே

காதலில் விழுந்தேன் படத்தின் மற்ற பாடல்கள்

உனக்கென நான் தேடல் சொற்கள்:
உனக்கென நான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உனக்கென நான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உனக்கென நான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உனக்கென நான் பாட்டு
உனக்கென நான் ஐடியூன்ஸ், உனக்கென நான் tamil2lyrics
காதலில் விழுந்தேன் உனக்கென நான்
உனக்கென நான் பாட்டு வரிகள்
உனக்கென நான் படத்தின் பேர்
உனக்கென நான் ரிங்டோன்
உனக்கென நான் வரிகள்
பாடல் உனக்கென நான்
விஜய் ஆன்டனி உனக்கென நான்