நீலாங்கரையில்

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரேயா கோஷல்,கார்த்திக்
இசையமைப்பாளர்: என். ஆர். ரகுநந்தன்
படம்: புலிவால்

இந்த பாடலை பற்றி :
புலிவால் படத்திலிருந்து நீலாங்கரையில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரேயா கோஷல்,கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் என். ஆர். ரகுநந்தன்.நீலாங்கரையில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

புலிவால் படத்தின் நீலாங்கரையில் பாடலின் வரிகள்

பாடகி : ஸ்ரேயா கோஷல்

பாடகா் : கார்த்திக்

இசையமைப்பாளா் : என். ஆர். ரகுநந்தன்

ஆண் : நீலாங்கரையில்
கானாங்குருவி தானா
தவிக்குதே

பெண் : வானம் திறந்து
வையம் கடந்து
பறப்போம் காற்றிலே

ஆண் : உடம்பிலிருந்து
உசுர மட்டும் உருவி
உருவி எடுக்காதே

பெண் : மாசம் மாசம்
டீசல் விலை போல்
ஆச பாசம் ஏத்தாதே

ஆண் : புடவை துவைக்கும்
துறவிய போல முழியா
முழிக்குறேன்

பெண் : புலிவால் புடிச்ச
எலிய போல தவியா
தவிக்குறேன்

ஆண் : நீலாங்கரையில்
கானாங்குருவி தானா
தவிக்குதே

பெண் : வானம் திறந்து
வையம் கடந்து
பறப்போம் காற்றிலே

ஆண் : பட்டா போட்ட
தங்கக் கட்டி பட்டாம்பூச்சி
போட்ட குட்டி ஒத்து போகும்
காதலியெல்லாம் பிஃப்டி பிஃப்டி
பொண்டாட்டி

பெண் : கன்னிப்பொண்ண
ஓரம் கட்டி கன்னங்கிள்ளி
கண்ண கட்டி காதல் பண்ணும்
பூனை குட்டி எட்டி நில்லு நான்
கெட்டி

ஆண் : காதல் எறும்பு
ஊரும் போது கல்லும்
கூட தேயுமே தூரம் பார்த்து
நின்ற பெண்மை தோளில்
வந்து சாயுமே

பெண் : நீ தொட தொட
உச்சந்தலை கொதிக்குது
விரல் பட பட உள்ளங்கால்
குளிருது

ஆண் : நீ சண்டைக்காரி
ஆகும்போது பதறுது
என் மண்டைக்குள்ள
நட்சத்திரம் சிதறது

பெண் : புலிவால் புடிச்ச
எலிய போல தவியா
தவிக்குறேன்

ஆண் : புடவை துவைக்கும்
துறவிய போல முழியா
முழிக்குறேன்

பெண் : நீலாங்கரையில்
கானாங்குருவி தானா
தவிக்குதே

ஆண் : வானம் திறந்து
வையம் கடந்து
பறப்போம் காற்றிலே

பெண் : செல்போன் மொழி
பேசி பேசி சின்ன பொண்ண
கெடுக்காதே நூலாம்படை
நூலை கட்டி கோயில் தேரை
இழுக்காதே

ஆண் : வெள்ளக்காரன்
போகும்போதே வெட்கம்
கூட போயே போச்சே
காலம் இப்போ ஹைடெக்
ஆச்சே கைய விட்டு போகாதே

பெண் : ஓ பெண்கள்
கொண்ட ஆசையெல்லாம்
ஃபிரிட்ஜில் வைத்த ஆப்பிள்
போல ஆண்கள் கொண்ட
ஆசையெல்லாம் வெயிலில்
வைத்த வெண்ணை போல

ஆண் : நீ வர வர
வக்கீலுக்கு படிக்குற
நீ வாதம் பண்ணி வாதம்
பண்ணி ஜெய்க்குற

பெண் : நீ முட்டாளுனு
நம்பவச்சு நடிக்குற உன்
முட்ட கண்ணில் ரெட்ட
முயல் புடிக்குற

ஆண் : புடவை துவைக்கும்
துறவிய போல முழியா
முழிக்குறேன்

பெண் : புலிவால் புடிச்ச
எலிய போல தவியா
தவிக்குறேன்

ஆண் : நீலாங்கரையில்
கானாங்குருவி தானா
தவிக்குதே

பெண் : வானம் திறந்து
வையம் கடந்து
பறப்போம் காற்றிலே

புலிவால் படத்தின் மற்ற பாடல்கள்

நீலாங்கரையில் தேடல் சொற்கள்:
நீலாங்கரையில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீலாங்கரையில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீலாங்கரையில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீலாங்கரையில் பாட்டு
நீலாங்கரையில் ஐடியூன்ஸ், நீலாங்கரையில் tamil2lyrics
புலிவால் நீலாங்கரையில்
நீலாங்கரையில் பாட்டு வரிகள்
நீலாங்கரையில் படத்தின் பேர்
நீலாங்கரையில் ரிங்டோன்
நீலாங்கரையில் வரிகள்
பாடல் நீலாங்கரையில்
என். ஆர். ரகுநந்தன் நீலாங்கரையில்