வாழ்கை உன்னை

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிஹர சுதன்
இசையமைப்பாளர்: என். ஆர். ரகுநந்தன்
படம்: புலிவால்

இந்த பாடலை பற்றி :
புலிவால் படத்திலிருந்து வாழ்கை உன்னை என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிஹர சுதன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் என். ஆர். ரகுநந்தன்.வாழ்கை உன்னை பாடல் வரிகள் கீழே உள்ளது.

புலிவால் படத்தின் வாழ்கை உன்னை பாடலின் வரிகள்

பாடகா் : ஹரிஹர சுதன்

இசையமைப்பாளா் : என். ஆர். ரகுநந்தன்

ஆண் : வாழ்க்கை உன்னை
ஓட விடும் வரைமுறையின்றி
ஆட விடும் நீண்ட தூரம் ஓடிய
பின்னே நெஞ்சு கூட வாடிய
பின்னே தப்பான திசையென்று
தகவல் தரும்

ஆண் : தூரம் கடந்து
வந்தால் தானே ஊரை
சேர முடியும் உயரம்
தாண்டி வந்தால் தானே
துயரம் தாண்ட முடியும்

ஆண் : வாழ்க்கை உன்னை
ஓட விடும் வரைமுறையின்றி
ஆட விடும் நீண்ட தூரம் ஓடிய
பின்னே நெஞ்சு கூட வாடிய
பின்னே தப்பான திசையென்று
தகவல் தரும்

ஆண் : விதைகள் தம்மை
அழிக்காமல் வேர்கள் என்பது
கிடையாது வியர்வை என்பதை
இழக்காமல் வெற்றி என்பது
கிடையாது

ஆண் : தேடி போனது
வேறு நீ தேடி அடைவது
வேறு ஏதோ ஒன்றை
அடையும் போது எதுவோ
தொலையும் பாரு

ஆண் : மனிதன் போடும்
கணக்கில் எல்லாம்
சரியும் தவறும் உண்டு
காலம் போடும் கணக்கில்
எல்லாம் சரிகள் மட்டுமே
உண்டு

ஆண் : உனது கணக்கும்
காலக் கணக்கும் ஒத்துப்
போனால் நன்று

ஆண் : வாழ்க்கை உன்னை
ஓட விடும் வரைமுறையின்றி
ஆட விடும் நீண்ட தூரம் ஓடிய
பின்னே நெஞ்சு கூட வாடிய
பின்னே தப்பான திசையென்று
தகவல் தரும்

ஆண் : நித்தம் குற்றம்
புரிகின்றாய் நினைத்து
கூட மகிழ்கின்றாய்
எல்லாக் கண்ணும்
தூங்குவதாய் இன்னொரு
குற்றம் இழைக்கின்றாய்

ஆண் : பாவம் என்பது
உன் குப்பை அது நித்தம்
சேரும் பாரு பாவக் குப்பை
எல்லாம் கூட்டி பயிருக்கு
உரமாய் போடு

ஆண் : கரும்பு காட்டில்
யானை புகுந்தால் எதுவும்
இல்லை மிச்சம் யானை
காதில் எறும்பு நுழைந்தால்
அதுவே துயரின் உச்சம்

ஆண் : மடியில் கணமே
இல்லையென்றால்
வாழ்வில் ஏது அச்சம்

ஆண் : வாழ்க்கை உன்னை
ஓட விடும் வரைமுறையின்றி
ஆட விடும் நீண்ட தூரம் ஓடிய
பின்னே நெஞ்சு கூட வாடிய
பின்னே தப்பான திசையென்று
தகவல் தரும்

ஆண் : தூரம் கடந்து
வந்தால் தானே ஊரை
சேர முடியும் உயரம்
தாண்டி வந்தால் தானே
துயரம் தாண்ட முடியும்

ஆண் : வாழ்க்கை உன்னை
ஓட விடும் வரைமுறையின்றி
ஆட விடும் நீண்ட தூரம் ஓடிய
பின்னே நெஞ்சு கூட வாடிய
பின்னே தப்பான திசையென்று
தகவல் தரும்

புலிவால் படத்தின் மற்ற பாடல்கள்

வாழ்கை உன்னை தேடல் சொற்கள்:
வாழ்கை உன்னை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வாழ்கை உன்னை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வாழ்கை உன்னை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வாழ்கை உன்னை பாட்டு
வாழ்கை உன்னை ஐடியூன்ஸ், வாழ்கை உன்னை tamil2lyrics
புலிவால் வாழ்கை உன்னை
வாழ்கை உன்னை பாட்டு வரிகள்
வாழ்கை உன்னை படத்தின் பேர்
வாழ்கை உன்னை ரிங்டோன்
வாழ்கை உன்னை வரிகள்
பாடல் வாழ்கை உன்னை
என். ஆர். ரகுநந்தன் வாழ்கை உன்னை