நெஞ்சங்குழி

This content is also available in: English

பாடகர்கள்: கார்த்திக் மற்றும் பூஜா வைத்யநாத்
இசையமைப்பாளர்: பிரேம் குமார்
படம்: நவீன சரஸ்வதி சபதம்

இந்த பாடலை பற்றி :
நவீன சரஸ்வதி சபதம் படத்திலிருந்து நெஞ்சங்குழி என்ற பாடலை பாடிய பாடகர்கள் கார்த்திக் மற்றும் பூஜா வைத்யநாத். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பிரேம் குமார்.நெஞ்சங்குழி பாடல் வரிகள் கீழே உள்ளது.

நவீன சரஸ்வதி சபதம் படத்தின் நெஞ்சங்குழி பாடலின் வரிகள்

பாடகர்கள் : கார்த்திக் மற்றும் பூஜா வைத்யநாத்

இசை அமைப்பாளர் : பிரேம் குமார்

ஆண் : நெஞ்சாங்குழி ஏங்குதடி
நெத்தி பொட்டு வீங்குதடி
நித்திரைய தொலைச்ச கண்ணு
துடிக்குதடி

ஆண் : உன் நெனப்பு ஓங்குதடி
உள் உசுரு நோகுதடி
கண்ணீர் பட்டு கன்னம் ரெண்டும்
வலிக்குதடி

ஆண் : உன்ன விட்டு நான் பிரிஞ்சா
வாழ்க்க அத்து போகும் அழகே
கண்ண விட்டு நீ மறஞ்சா
பார்வை செத்து போகும்

ஆண் : நித்தம் உன்ன எண்ணி எண்ணி
நேரம் வத்திப் போகும் அடியே
சுட்டு விரல் நீண்டு நீண்டு
தூரம் செத்து போகும்

ஆண் : {அடி உன்ன உன்ன நெனச்சு
என் உசுர கையில் புடிச்சு
நான் நொந்து வெந்து கெடக்கேன்
சிறு நூலாம் படையா எளச்சு } (2)

பெண் : ஆஹா….ஆஆ…

ஆண் : நெஞ்சாங்குழி ஏங்குதடி
நெத்தி பொட்டு வீங்குதடி
நித்திரைய தொலைச்ச கண்ணு
துடிக்குதடி

ஆண் : அடிக்கிற காத்த நிறுத்தி
வாய புடுங்க பாப்பேன்
வண்ண வண்ண சிறு பறவைக போனா
உன்ன பத்தி கேப்பேன்

ஆண் : அடி நீ அங்கே எங்கோ நடக்க
அடி இங்கே என் நிலம் துடிக்க
நீ மண்ணில் கண்ணீர் வடிக்க
அது விண்ணைச் சென்று நனைக்க
நீ தேட நான் வாட

ஆண் : அட உன்ன உன்ன நெனச்சு
என் உசுர கையில் புடிச்சு
நான் நொந்து வெந்து கெடக்கேன்
சிறு நூலாம் படையா எளச்சு

பெண் : நெஞ்சாங்குழி ஏங்கும் ஏங்கும்
நெத்தி போட்டு வீங்கி போகும்
நித்திரைய தொலைச்சா கண்ணு
துடி துடிக்கும்

பெண் : ……………………………………….

பெண் : கண்ணுக்குள்ளே உன் முகம் தான்யா
வந்து வந்து போகும்
நெஞ்சு பட்ட பாடு சாமிக்கு சொன்னா
பாரம் கொஞ்சம் தூங்கும்

பெண் : உன் ஆசைய நெஞ்சில் அழிக்க
நான் அமிலம் ஊத்திக் குடிக்க
உன் நினைவை எப்படி மறக்க
வான் நீலத்தை எதை கொண்டு அழிக்க
நீ வாட நான் தேட

ஆண் : {என் இரவை எல்லாம் கொளுத்தி
அதை எல்லா திசையிலும் செலுத்தி
நான் உயிரோடு உள்ளதை உணர்த்தி
உயிர் மீட்பேன் உன்னை மலர்த்தி} (2)

நவீன சரஸ்வதி சபதம் படத்தின் மற்ற பாடல்கள்

நெஞ்சங்குழி தேடல் சொற்கள்:
நெஞ்சங்குழி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நெஞ்சங்குழி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நெஞ்சங்குழி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நெஞ்சங்குழி பாட்டு
நெஞ்சங்குழி ஐடியூன்ஸ், நெஞ்சங்குழி tamil2lyrics
நவீன சரஸ்வதி சபதம் நெஞ்சங்குழி
நெஞ்சங்குழி பாட்டு வரிகள்
நெஞ்சங்குழி படத்தின் பேர்
நெஞ்சங்குழி ரிங்டோன்
நெஞ்சங்குழி வரிகள்
பாடல் நெஞ்சங்குழி
பிரேம் குமார் நெஞ்சங்குழி