கதை சொல்ல போறேன்

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரிங்கா,விக்ரம்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
படம்: தெய்வ திருமகள்

இந்த பாடலை பற்றி :
தெய்வ திருமகள் படத்திலிருந்து கதை சொல்ல போறேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரிங்கா,விக்ரம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்.கதை சொல்ல போறேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தெய்வ திருமகள் படத்தின் கதை சொல்ல போறேன் பாடலின் வரிகள்

பாடகி : ஸ்ரிங்கா

பாடகர் : விக்ரம்

இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

ஆண் : கத சொல்ல
போறேன் கத சொல்ல
போறேன்

குழந்தை : என்ன கதப்பா

ஆண் : ராஜா ராணி
கத சொல்ல போறேன்
காக்கா குருவி கத
சொல்ல போறேன்

குழந்தை : ராஜா
கதையா காக்கா
கதையா

ஆண் : என்ன கத
என்ன கத

ஆண் : கதையா அதெல்லாம்
எதுக்கு சொல்லாத சொல்லாத
வேற யாராவது திருடி படமா
எடுத்துட்டாங்கனா

ஆண் : காக்கா கதைய
சொல்லு காக்கா கதைய
சொல்லு

ஆண் : ராஜா கத சொல்லு
ராஜாதி ராஜா இளையராஜா
கதைய சொல்லு

ஆண் : ஒரே ஒரு ஊருக்குள்ள
ஒரே ஒரு ராஜாவாம்

குழந்தை : ஒரே ஒரு ராஜாவா
ஊர்ல வேற யாரும்
இல்லையா

ஆண் : ஹ்ம்ம் இருக்காங்க
ராஜாவோட மந்திரிங்க நாலு
பேரும் கூஜாவாம்

குழந்தை : கூஜாவா ம்ம்

ஆண் : ஒரே ஒரு ஊருக்குள்ள
ஒரே ஒரு ராஜாவாம் ராஜாவோட
மந்திரிங்க நாலு பேரும்
கூஜாவாம்

ஆண் : நாட்டுல போர்
வந்தது போரில சண்டை
நடக்குது நாட்டுல போர்
வந்தது போரில சண்டை
நடக்குது சண்டையில்
குண்டு வெடிக்குது
டோம் டோம்

குழந்தை : சண்டையா
எதுக்கு

ஆண் : சண்ட தான் எதுக்கு
நடந்துச்சு சண்ட தான் எதுக்கு
நடந்துச்சு காக்கா வடைய
திருடிருச்சுல

ஆண் : அதான் அதான்

ஆண் : சண்ட தான் எதுக்கு
நடந்துச்சு காக்காதான் வடைய
திருடுச்சு நரியும்தான் பாட
சொல்லுச்சு ச ரி க ம பா

குழந்தை : காக்கா பாடிச்சா

ஆண் : ஓ பாடாதா
சரி கா கா கா

குழந்தை : ஐயோ வடை
போச்சே காக்கா பாவம்ல

ஆண் : ராஜா விடுவாரா
ஹா ஹா ஹா

ஆண் : ராஜா பாட்டு பாட
நரி வடைய போடா நம்ம
ராஜாகிட்ட காக்கா
தேங்க்ஸ் சொல்லிச்சு

ஆண் : ஊரெல்லாம் சேர்ந்து
கொண்டாட்டந்தான் ஹோ
நரியோட திட்டம் திண்டாட்டம்
தான் நாடெல்லாம் வாழ்த்துதே
ராஜா வாழ்க

குழு : ராஜா வாழ்க
ராஜா வாழ்க

குழந்தை : இது ராஜா
கதையா காக்கா
கதையா

ஆண் : காக்கா
ராஜா கத

குழந்தை : ஹே ஹே
ஹே ஹே

குழு : காக்கா ராஜா
வாழ்க காக்கா ராஜா
வாழ்க

ஆண் : நெனச்சு நெனச்சு
நான் கத சொல்ல சிரிச்சு
சிரிச்சு நீ அதை கேட்க
இன்னும் கத இருக்கு
என்கிட்ட கேட்டு கேட்டு
நீ பாராட்ட

ஆண் : ஒரே ஒரு ஊருக்குள்ள
ஒரே ஒரு ராஜாவாம் ராஜாவோட
மந்திரிங்க நாலு பேரும்
கூஜாவாம்

குழந்தை : ஐயோ திரும்பவும்
அதே ராஜா கதையா

ஆண் : இது அந்த ராஜா
இல்ல வேற ராஜா

ஆண் : இந்த ராஜாக்கு
என்ன கத

ஆண் : சூப்பர்மேன் சூப்பர்மேன்
அத சொல்லாத அத சொல்லாத

ஆண் : அனகோண்டா கதைய
சொல்லு அனகோண்டா கதைய
சொல்லு யார் சார் யார் சார்
ஆ டைனோசர்

ஆண் : நாட்டுல ரொம்ப
நாளா டைனோசர் தொல்லனு
மக்கள் ராஜாகிட்ட போனாங்க
டைனோசர வேட்டையாட
சூப்பர்மேன் போல மாறி
ராஜாவ போக சொல்லி
கேட்டாங்க

ஆண் : { வழி எல்லாம்
அனகோண்டா பயம்
காட்டுது அத தாண்டி
போனாரு புயல் தாக்குது } (2)

ஆண் : புயல் தாண்டி
போனாரு புலி உறுமுது
ராஜாவின் சத்தத்தில்
புலி பதுங்குது

குழந்தை : டைனோசர்ல
சாகணும் புலி ஏன் செத்துச்சு

ஆண் : நாடெல்லாம்
வாழ்த்து ராஜா வாழ்க

குழு : காக்கா ராஜா
வாழ்க காக்கா ராஜா
வாழ்க

குழந்தை : அப்பா
போதும்பா
விட்டுடுப்பா

ஆண் : முழிச்சி முழிச்சி
நான் கத சொல்ல மடக்கி
மடக்கி நீ அத கேட்க இன்னும்
கத இருக்கு என்கிட்ட கேட்டு
கேட்டு நீ பாராட்ட

ஆண் : ஒரே ஒரு ஊருக்குள்ள
ஒரே ஒரு ராஜாவாம் ராஜாவோட
கதைய கேட்டு தூங்குது
நிலாவாம்

ஆண் : லாலலே லாலலே
லாலலே லாலலே லாலலே
லாலலே லாலலே லாலலே

ஆண் : திரும்ப திரும்ப நா
கத சொல்ல தூங்கி தூங்கி
நீ அத கேட்க இன்னும் கத
இருக்கு என் கிட்ட கேட்டு
கேட்டு நீ பாராட்ட

தெய்வ திருமகள் படத்தின் மற்ற பாடல்கள்

கதை சொல்ல போறேன் தேடல் சொற்கள்:
கதை சொல்ல போறேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கதை சொல்ல போறேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கதை சொல்ல போறேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கதை சொல்ல போறேன் பாட்டு
கதை சொல்ல போறேன் ஐடியூன்ஸ், கதை சொல்ல போறேன் tamil2lyrics
தெய்வ திருமகள் கதை சொல்ல போறேன்
கதை சொல்ல போறேன் பாட்டு வரிகள்
கதை சொல்ல போறேன் படத்தின் பேர்
கதை சொல்ல போறேன் ரிங்டோன்
கதை சொல்ல போறேன் வரிகள்
பாடல் கதை சொல்ல போறேன்
ஜி.வி. பிரகாஷ் குமார் கதை சொல்ல போறேன்