பாரா பாரா ஆண்

This content is also available in: English

பாடகர்கள்: ஜி. வி. பிரகாஷ் குமார்
இசையமைப்பாளர்: என். ஆர். ரகுநந்தன்
படம்: நீர் பறவை

இந்த பாடலை பற்றி :
நீர் பறவை படத்திலிருந்து பாரா பாரா ஆண் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜி. வி. பிரகாஷ் குமார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் என். ஆர். ரகுநந்தன்.பாரா பாரா ஆண் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நீர் பறவை படத்தின் பாரா பாரா ஆண் பாடலின் வரிகள்

பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

இசை அமைப்பாளர் : என். ஆர். ரகுநந்தன்

ஆண் : பர பர பர பறவை ஒன்று
கிரு கிரு வென தலையும் சுற்றி
உன் காலில் வீழ்ந்தது பெண்ணே ஜெபிக்கவா ..

ஆண் : அது பறந்திட வானம் இல்லை
அது இருந்திட பூமியும் இல்லை
உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா..

ஆண் : ஓ அன்பே எந்தன் வாழ்வுக்கு
ஆசிர்வாதம் நீயடி
கண்ணீராடும் பிள்ளைக்கு
நீயே காதல் தாயடி ..

ஆண் : உன்னை காண மீண்டும் மீண்டும்
கண்கள் தூண்டும்
இருமுறை ஒரு வானவில் வருமா

ஆண் : பர பர பர பறவை ஒன்று
கிரு கிரு வென தலையும் சுற்றி
உன் காலில் வீழ்ந்தது பெண்ணே ஜெபிக்கவா..

ஆண் : அது பறந்திட வானம் இல்லை
அது இருந்திட பூமியும் இல்லை
உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா..

ஆண் : தேவாலயம் மெழுகும் நானே
திரி ஏறும் தீயும் நீயே
என் தேகம் கண்ணீர் விட்டு கரையுதே

ஆண் : மீன் கொத்த செல்லும் பறவை
மீன் வலையில் விழுந்தது போல
வாழ்க்கை உன் சாலை ஓரம் தவிக்குதே

ஆண் : மழையில் கழுவிய மணலிலே
தொலைந்த காலடி நானடி
முகத்தை தொலைத்த என் வாழ்வுக்கு
நிலைத்த முகவரி நீயடி

ஆண் : பெட்ரோல் மீது தீயை போல
உந்தன் மீது பற பற என பரவுது மனசு

ஆண் : பற பற பற பறவை ஒன்று
கிறு கிறுவென தலையும் சுற்றி
உன் காலில் வீழ்ந்தது பெண்ணே ஜெபிக்கவா

ஆண் : அது பறந்திட வானம் இல்லை
அது இருந்திட பூமியும் இல்லை
உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா

ஆண் : என் உலகம் கைவசம் இல்லை
என் பெயரும் ஞாபகம் இல்லை
சத்தியமாய் என் அருகே நீ இருக்கிறாய்

ஆண் : பெற்றவரை வீட்டில் மறந்தேன்
மற்றவரை ரோட்டில் மறந்தேன்
மறதியிலும் உன் நினைவை வளர்க்கிறாய்

ஆண் : மங்கை என் குரல் கேளடி
நான் மதுவில் கிடக்கின்ற ஈ அடி
எனது அசுத்தங்கள் பாரடி
வந்து என்னை பரிசுத்தம் செய்யடி

ஆண் : பெட்ரோல் மீது தீயை போல
உந்தன் மீது பற பற என பரவுது மனசு

ஆண் : பர பர பர பறவை ஒன்று
கிரு கிரு வென தலையும் சுற்றி
உன் காலில் வீழ்ந்தது பெண்ணே ஜெபிக்கவா..

ஆண் : அது பறந்திட வானம் இல்லை
அது இருந்திட பூமியும் இல்லை
உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா..

நீர் பறவை படத்தின் மற்ற பாடல்கள்

பாரா பாரா ஆண் தேடல் சொற்கள்:
பாரா பாரா ஆண் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பாரா பாரா ஆண் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பாரா பாரா ஆண்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பாரா பாரா ஆண் பாட்டு
பாரா பாரா ஆண் ஐடியூன்ஸ், பாரா பாரா ஆண் tamil2lyrics
நீர் பறவை பாரா பாரா ஆண்
பாரா பாரா ஆண் பாட்டு வரிகள்
பாரா பாரா ஆண் படத்தின் பேர்
பாரா பாரா ஆண் ரிங்டோன்
பாரா பாரா ஆண் வரிகள்
பாடல் பாரா பாரா ஆண்
என். ஆர். ரகுநந்தன் பாரா பாரா ஆண்