ராசாத்தி உன்ன

This content is also available in: English

பாடகர்கள்: பி. ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: வைதேஹி காத்திருந்தாள்

இந்த பாடலை பற்றி :
வைதேஹி காத்திருந்தாள் படத்திலிருந்து ராசாத்தி உன்ன என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. ஜெயச்சந்திரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ராசாத்தி உன்ன பாடல் வரிகள் கீழே உள்ளது.

வைதேஹி காத்திருந்தாள் படத்தின் ராசாத்தி உன்ன பாடலின் வரிகள்

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : { ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு காத்தாடி
போலாடுது ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு காத்தாடி
போலாடுது } (2)

ஆண் : பொழுதாகிப்
போச்சு விளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத்
தேடுது

ஆண் : ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு காத்தாடி
போலாடுது

ஆண் : { கண்ணுக்கொரு
வண்ணக்கிளி காதுக்கொரு
கானக் குயில் நெஞ்சுக்கொரு
வஞ்சிக்கொடி நீதானம்மா } (2)

ஆண் : தத்தித் தவழும்
தங்கச் சிமிழே பொங்கிப்
பெருகும் சங்கத் தமிழே
முத்தம் தர நித்தம் வரும்
நட்சத்திரம் யாரோடு இங்கு
எனக்கென்ன பேச்சு நீதானே
கண்ணே நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வாவா
கண்ணே

ஆண் : ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு காத்தாடி
போலாடுது பொழுதாகிப்
போச்சு விளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத்
தேடுது ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு காத்தாடி
போலாடுது

ஆண் : { மங்கை ஒரு
கங்கை என மன்னன்
ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல்
கதை சொன்னால்
என்ன } (2)

ஆண் : அத்தை மகளோ
மாமன் மகளோ சொந்தம்
எதுவோ பந்தம் எதுவோ
சந்தித்ததும் சிந்தித்ததும்
தித்தித்திட அம்மாடி நீதான்
இல்லாத நானும் வெண்மேகம்
வந்து நீந்தாத வானம் தாங்காத
ஏக்கம் போதும் போதும்

ஆண் : ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு காத்தாடி
போலாடுது பொழுதாகிப்
போச்சு விளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத்
தேடுது ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு காத்தாடி
போலாடுது காத்தாடி
போலாடுது

வைதேஹி காத்திருந்தாள் படத்தின் மற்ற பாடல்கள்

ராசாத்தி உன்ன தேடல் சொற்கள்:
ராசாத்தி உன்ன எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ராசாத்தி உன்ன வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ராசாத்தி உன்ன.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ராசாத்தி உன்ன பாட்டு
ராசாத்தி உன்ன ஐடியூன்ஸ், ராசாத்தி உன்ன tamil2lyrics
வைதேஹி காத்திருந்தாள் ராசாத்தி உன்ன
ராசாத்தி உன்ன பாட்டு வரிகள்
ராசாத்தி உன்ன படத்தின் பேர்
ராசாத்தி உன்ன ரிங்டோன்
ராசாத்தி உன்ன வரிகள்
பாடல் ராசாத்தி உன்ன
இளையராஜா ராசாத்தி உன்ன