மனமகனின் சத்தியம்

This content is also available in: English

பாடகர்கள்: லதா ரஜினிகாந்த்,ஹரிச்சரன்
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
படம்: கோச்சடையான்

இந்த பாடலை பற்றி :
கோச்சடையான் படத்திலிருந்து மனமகனின் சத்தியம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் லதா ரஜினிகாந்த்,ஹரிச்சரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான்.மனமகனின் சத்தியம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கோச்சடையான் படத்தின் மனமகனின் சத்தியம் பாடலின் வரிகள்

பாடகி : லதா ரஜினிகாந்த்

பாடகர் : ஹரிச்சரன்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : கண்ணீா்
கனியே உன்னை
கை விடமாட்டேன்
சத்தியம் சத்தியம்
இது சத்தியமே

ஆண் : மாலை சூடிய
காலை கதிரின் மேலே
சத்தியம் சத்தியம் இது
சத்தியமே

ஆண் : ஒரு குழந்தை
போலே ஒரு வைரம்
போலே தூய்மையான
என் சத்தியம் புனிதமானது

ஆண் : இப்பிறவியில்
இன்னொரு பெண்ணை
சிந்தையிலும் தொடேன்
பிறிதோர் பக்கம் மனம்
சாயா பிரியம் காப்பேன்

ஆண் : செல்ல
கொலுசின் சிணுங்கல்
அறிந்து சேவை செய்வேன்
நெற்றி பொட்டில் முத்தம்
பதித்து நித்தம் எழுவேன்

ஆண் : கை பொருள்
யாவையும் கரைத்தாலும்
கணக்கு கேளேன் ஒவ்வொரு
வாதம் முடியும் போதும்
உன்னிடம் தோற்பேன்

ஆண் : கண்ணீா்
கனியே உன்னை
கை விடமாட்டேன்
சத்தியம் சத்தியம்
இது சத்தியமே

ஆண் : மாலை சூடிய
காலை கதிரின் மேலே
சத்தியம் சத்தியம் இது
சத்தியமே

ஆண் : அர்த்த ஜாம
திருடன் போல
அதிர்ந்து பேசேன்
காமம் தீரும் பொழுதும்
எந்தன் காதல் தீரேன்

ஆண் : மாத மலர்ச்சி
மறையும் வயதில்
மார்பு கொடுப்பேன்
நோய் மடியோடு நீ
வீழ்ந்தால் தாய்
மடியாவேன்

ஆண் : சுவாசம் போல
அருகில் இருந்து
சுகப்பட வைப்பேன்
உந்தன் உறவை எந்தன்
உறவாய் நெஞ்சில்
சுமப்பேன்

ஆண் : உன் கனவுகள்
நிஜமாக என்னையே
தருவேன் உன் வாழ்வு
மண்ணில் நீள என் உயிர்
தருவேன்

ஆண் : கெட்டி மேளம்
கெட்டி மேளம்

பெண் : காதல் கனவா
உந்தன் கரம் விட மாட்டேன்
சத்தியம் சத்தியம் இது
சத்தியமே

பெண் : தாய் வழி வந்த
எங்கள் தர்மத்தின் மேலே
சத்தியம் சத்தியம் இது
சத்தியமே

பெண் : ஒரு குழந்தை
போலே ஒரு வைரம்
போலே
{ தூய்மையான
என் சத்தியம்
புனிதமானது } (3)

கோச்சடையான் படத்தின் மற்ற பாடல்கள்

மனமகனின் சத்தியம் தேடல் சொற்கள்:
மனமகனின் சத்தியம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மனமகனின் சத்தியம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மனமகனின் சத்தியம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மனமகனின் சத்தியம் பாட்டு
மனமகனின் சத்தியம் ஐடியூன்ஸ், மனமகனின் சத்தியம் tamil2lyrics
கோச்சடையான் மனமகனின் சத்தியம்
மனமகனின் சத்தியம் பாட்டு வரிகள்
மனமகனின் சத்தியம் படத்தின் பேர்
மனமகனின் சத்தியம் ரிங்டோன்
மனமகனின் சத்தியம் வரிகள்
பாடல் மனமகனின் சத்தியம்
எ.ஆர். ரஹ்மான் மனமகனின் சத்தியம்