ஊமை பெண் ஒரு

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: கே. வி. மகாதேவன்
படம்: வானம்பாடி

இந்த பாடலை பற்றி :
வானம்பாடி படத்திலிருந்து ஊமை பெண் ஒரு என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன்.ஊமை பெண் ஒரு பாடல் வரிகள் கீழே உள்ளது.

வானம்பாடி படத்தின் ஊமை பெண் ஒரு பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : {ஊமை பெண் ஒரு கனவு
கண்டாள் அதை
உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்} (2)

பெண் : {வெளியே சொல்லவும்
மொழி இல்லை
வேதனை தீரவும் வழி இல்லை} (2)

பெண் : ஊமை பெண் ஒரு கனவு
கண்டாள் அதை
உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்

பெண் : பறவைகள் நினைப்பதை
யார் அறிவார்
அந்த பரம்பொருள் இதயத்தை
யார் அறிவார் யார் அறிவார்

பெண் : பறவைகள் நினைப்பதை
யார் அறிவார்
அந்த பரம்பொருள் இதயத்தை
யார் அறிவார்
குழந்தைகள் எண்ணத்தை
யார் அறிவார்
அந்த குலமகள் ஆசையை
யார் அறிவார்

பெண் : ஊமை பெண் ஒரு கனவு
கண்டாள் அதை
உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்

பெண் : உயிரற்ற கொடியில்
மலர்ந்திருந்தால்
அவள் ஒரு நாள் ஆவது
மகிழ்ந்திருப்பாள் மகிழ்ந்திருப்பாள்

பெண் : உயிரற்ற கொடியில்
மலர்ந்திருந்தால்
அவள் ஒரு நாள் ஆவது
மகிழ்ந்திருப்பாள்
உலவும் காற்றாய்
பிறந்திருந்தாலும்
அவள் ஒவ்வொரு நாளும்
வாழ்ந்திருப்பாள்

பெண் : ஊமை பெண் ஒரு கனவு
கண்டாள் அதை
உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்

பெண் : மானிட ஜாதியில்
பிறந்து விட்டாள்
அவள் மானிட தர்மத்தில்
கலந்து விட்டாள் கலந்து விட்டாள்

பெண் : மானிட ஜாதியில்
பிறந்து விட்டாள்
அவள் மானிட தர்மத்தில்
கலந்து விட்டாள்
மண்ணில் வாழவும் முடியவில்லை
அந்த வானத்தில் பறக்கவும்
சிறகு இல்லை

பெண் : ஊமை பெண் ஒரு கனவு
கண்டாள் அதை
உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்

பெண் : வெளியே சொல்லவும்
மொழியில்லை
வேதனை தீரவும் வழி இல்லை

பெண் : ஊமை பெண் ஒரு கனவு
கண்டாள் அதை
உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்

வானம்பாடி படத்தின் மற்ற பாடல்கள்

ஊமை பெண் ஒரு தேடல் சொற்கள்:
ஊமை பெண் ஒரு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஊமை பெண் ஒரு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஊமை பெண் ஒரு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஊமை பெண் ஒரு பாட்டு
ஊமை பெண் ஒரு ஐடியூன்ஸ், ஊமை பெண் ஒரு tamil2lyrics
வானம்பாடி ஊமை பெண் ஒரு
ஊமை பெண் ஒரு பாட்டு வரிகள்
ஊமை பெண் ஒரு படத்தின் பேர்
ஊமை பெண் ஒரு ரிங்டோன்
ஊமை பெண் ஒரு வரிகள்
பாடல் ஊமை பெண் ஒரு
கே. வி. மகாதேவன் ஊமை பெண் ஒரு